தமிழகத்தில் குற்றமே நடக்கவில்லை! முற்றுப்புள்ளி கோரும் முதல்வர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தொடர் கொலைகள், பெட்ரோல் குண்டு வீச்சு, கோவை டிஐஜி தற்கொலை, தமிழக போலீசாரின் லஞ்சம் வாங்கும் படலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர் அழிந்து போய் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில், "தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால், தமிழக காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சாதி, மதம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் நச்சுக் கருத்தை பார்ப்பவர்களால் தான் சமூக அமைதி சீர்குலைக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

பெண்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத மது விற்பனை பெருமளவில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் சட்டப்படி செயல்படாமல், அங்கேயே கட்ட பஞ்சாயத்து பேசி முடித்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் நடுநிலை தவறாமல் காவல்துறை செயல்பட வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும்.

சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றச் சம்பவங்களுக்கும் இந்த போதைப்பொருள் தான் முக்கிய காரணம். எனவே அதனை ஒழிப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் குற்றம் குறைந்திருக்கிறது என்ற உங்களின் புள்ளி விவரங்கள் எனக்கு தேவையில்லை. குற்றமே இல்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே எனக்கு தேவை" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Law And Order issue meet speech july


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->