மூளையை உண்ணும் அமீபா - மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பறந்த கடிதம்..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. இதற்கிடையே தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்டாய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இந்த நிலையில் தான், அரிய வகை மூளை தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், "தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். 

அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். 

மேலும், சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government guildelines announce for brain eating amoeba disease


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->