அடுக்குமாடியில் மயங்கி கிடந்த வாலிபர்கள் - சேலத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆனந்தா பாலம் பகுதியில் வாகனம் நிறுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் 5 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. 

இதனால் வாலிபர்கள் சிலர் அடிக்கடி உள்ளே புகுந்து மது அருந்துவது, கஞ்சா, குட்கா பயன்படுத்துவது, போதை ஊசி போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. 

இந்த நிலையில், நேற்று இரண்டு வாலிபர்கள் மேல்மாடிக்கு சென்று போதை ஊசியை தங்களது கையில் ஏற்றி போதையில் மயங்கி கிடந்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர், அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். 

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதை ஊசிகளை பயன்படுத்திய வாலிபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், போதை ஊசி, மாத்திரைகள் எப்படி கிடைக்கிறது? கஞ்சா சப்ளை செய்வது யார்? என்பது குறித்தும் உளவுத்துறை மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 youths use drugs injuction in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->