2026-ல் அதிமுக அல்லது திமுக தான் ஆட்சி அமைக்கும்!...சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரத்தில் அதிமுக சார்பில்  நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

அதிமுக ஒரு தேர்தலில் தோல்வி கண்டால் அதற்கடுத்து வரும் தேர்தலில் வீறுகொண்டு மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், இது தான் வரலாறு என்று கூறிய அவர், 2021 தேர்தலில் நமக்கும் திமுகவுக்கும் வெறும் 3 சதவீத வாக்குகள்தான் வித்தியாசம் என்று கூறினார்.

மேலும் அதிமுகவின் மெத்தன போக்கு, கவனக்குறைவு ஆகியவை காரணமாக திமுக கடந்த ஆட்சியில் உட்கார்ந்து விட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி, 4 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்ததாக பேசினார்.

ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதாக தெரிவித்த அவர், அவருக்கு உள்ள நிர்வாகத்திறமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்று பேசிய அவர், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும், ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK or DMK will form the government in 2026 cv shanmugam sensational speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->