தற்காப்புக் கலைகளை சர்வதேச அளவில் கொண்டுச் செல்ல வேண்டும் - ஆளுநர் ரவி.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று, சர்வதேச மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்ற 50 தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

அதன் பின்னர் அவர் பேசியதாவது, சிலம்பம், மான் கொம்பு, குத்துவரிசை, வாள் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளின் தாயகம் இந்தியா. இங்கிருந்து தான் இந்த கலைகள் மேலை நாடுகளுக்கு பரப்பப்பட்டது.

யோகா, சிலம்பம் போன்றவற்றை கற்பதால் உடல், மனம் தெளிவடைவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரியில் பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும்.

இந்த கலைகளை தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் கொண்டு செல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn governor rn ravi speech about Martial arts


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->