அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 600 சிறப்பு பேருந்துகள்! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப வசதியாக தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என்று, தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக , சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 அன்று வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

இது தவிர கோயம்புத்தூர் , ஈரோடு , புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் , கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in. மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Bus Special for new Year 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->