"மீண்டும் மஞ்சப்பை" திட்டம்., நாளை துவக்கி வைக்கின்றார் முதல்வர்.! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அறவே ஒழித்து துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டத்தை தமிழக முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.  மேலும், கடல் வாழ் உயிரினங்கள் உட்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

இதனை  கருத்தில் கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கோவிட்- 19 பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழ்நாடு அரசு இத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாகப் பணிகளைத் துவங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிகும் பழக்கத்தை பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே ”மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.

தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு, மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உட்பட) மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சி பொது மக்களின் பார்வைக்காக 23.12.2021 அன்று சென்னை-5 வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவானர் அரங்கத்தில்” வைக்கப்பட உள்ளது.

ஆகையால், பொதுமக்களாகிய தாங்கள் பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை 23.12.2021 அன்று மாலை 7:00 மணி வரை கண்டுகளித்து அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt manja pai thittam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->