ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட செய்தி.. நிம்மதியில் பணியாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


ரேஷன் கடை பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு, நியாயவிலை கடைகளுக்கு தனித்துறை ,பொட்டலம் முறை என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனுடைய, ரேஷன் கடை பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து பணியாளர்களின் சங்கம் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது.

எனினும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடை பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இதன் மீது நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே நியாயவிலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்கள் கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt news for ration shop workers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->