வரும் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- 

"தமிழகம் முழுவதும் 02.10.2024 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைகுட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். 

உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து கிராம மக்களும் கிராம சபைக் கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கிராம கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். மேலும், 02.10.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி Namma Grama Sabhai Mobile App” மூலம் உள்ளீடு செய்திட வேண்டும். அது குறித்த அறிக்கையை 02.10.2024 அன்றே அளித்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திக்கு 11.10.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt order coming october 2nd grama sabhai meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->