பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி அல்லது அரசியல் சின்னங்கள் இடம் பெறக்கூடாது – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!
TN Govt School Education Dept Order Caste Politics issue
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற தடையின்றி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ஆண்டு விழாக்களில் சாதி மற்றும் அரசியல் சின்னங்கள் இடம் பெறக் கூடாது என்று தெளிவாகக் கண்டிப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழாக்களை சிறப்பாக நடத்த மாநில அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனடிப்படையில் 2024-25 கல்வியாண்டுக்கான விழா ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்பப்படக் கூடாது என்றும், சாதி மற்றும் அரசியல் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
இத்தகைய நடைமுறைகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt School Education Dept Order Caste Politics issue