நேற்று சொன்னபடி.. இன்று செய்து காட்டிய மு.க ஸ்டாலின்.. அதிர்ச்சியில் மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் நேற்று வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் கோட்டையில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது பேசிய மு.க ஸ்டாலின் வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு பலமுறை அழுத்தம் கொடுத்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்கவில்லை. இதனால் வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுக்கும் என அறிவித்திருந்தார். 

நேற்று இரவு மு க ஸ்டாலின் அறிவித்தபடியே இன்று காலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பாதிப்புகளுக்கு நியாயமான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பலமுறை அழுத்தம் கொடுத்தும் வழங்காததால் உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt case filed against CentralGovt for flood relief fund


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->