விஏஓ-க்களுக்கு கை துப்பாக்கி வழங்கலாமா? அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவு.!!
TNGovt orders DGP to submit report on issue hand gun to VAO
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானத்தாள் என்ற கிராமத்தில் அழகுராஜ் என்ற நபர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி டிராக்டர் மூலம் மண் கடத்தியுள்ளார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பெயரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் வினோத்குமார் டிராக்டரையும் மண் அள்ளி உபயோகப்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து கனி வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
கனிமவளத் துறை அதிகாரிகள் கொளசம்பட்டி காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்து முத்துராஜ் மற்றும் வாகன ஓட்டுனர் விஜய் என்பவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது கொளசம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனது மண் கடத்தல் தொழில் பாதிக்கப்பட்டதால் முத்துராஜ் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாரை வழிமறித்து தாக்கியதோடு அவர் வைத்திருந்த செல்போனை படித்ததோடு வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார். இதனால் அச்சமடைந்த வினோத்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தப்பித்து கொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பல் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அவரது அலுவலகத்தில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தில்வருவாய் துறை அலுவலர்களை அச்சுறுத்தும் வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறியதால் பாதுகாப்பிற்காக கை துப்பாக்கி வழங்க வேண்டும் என வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கை மீது விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புமாறு தமிழக டிஜிபி சங்கர் ஜீவாலுக்கு தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
English Summary
TNGovt orders DGP to submit report on issue hand gun to VAO