நெய் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டிய திமுக அரசு..!! ஆவின் நிறுவனத்தின் செயலால் மக்கள் வேதனை..!!
TNGovt stuck new rate sticker on Aavin ghee bottle
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பொது மக்களுக்கு பால் மற்றும் 200 வகையான பால் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கொழுப்பு நிறைந்த பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நேற்று நெய்யின் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கும் வந்தது. ஆவியின் விலை லிட்டருக்கு 115 ரூபாய் உயர்த்தப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/aavin 12.png)
இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தால் விற்பனைக்காக அனுப்பப்பட்ட அனைத்து நெய் பாட்டில்களிலும் புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. விலை ஏற்றத்திற்கு முன்பே ஆவின் நிறுவனத்தால் விற்பனைக்கு வழங்கப்பட்ட அனைத்து நெய் பாட்டில்களிலும் புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழைய நெய் பாட்டில்களை அதே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
English Summary
TNGovt stuck new rate sticker on Aavin ghee bottle