இன்று மறுமலர்ச்சியாளர் ரமாபாய் பிறந்ததினம்..நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்!.
Today is the birth anniversary of the renaissance Ramabai Playwright William Shakespeare Memorial Day
ரோமியோ ஜூலியட்டை படைத்த உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர் திரு.வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் நினைவு தினம்!.
வில்லியம் ஷேக்ஸ்பியர் (Williams Shakespeare, ஏப்ரல் 26, 1564 - ஏப்ரல் 23, 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்' திருமதி.ரமாபாய் அவர்கள் பிறந்ததினம்!.
பண்டிதை ரமாபாய் (ஏப்ரல் 23, 1858 - ஏப்ரல் 5, 1922) என்பவர் ஒரு போராளியாகவும் சமூக விளங்கிய பெண்மணி ஆவார். பிராமணக் குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறிய சமூக சீர்திருத்தவாதி ஆவார். குழந்தைத் திருமணங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தவர். விதவை மறுமணம் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். ஒரு பால்ய விதவை.
தமது 22 ஆம் வயதில் ஒரு திருமணம் செய்து இரண்டு ஆண்டில் மீண்டும். பின் இங்கிலாந்து சென்று கிறித்துவ மதத்திற்கு மாறினார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று ஏராளமான குழுக்களை ஆரம்பித்தார். அங்கு பணம் திரட்டி இந்தியாவில் பால்ய பள்ளி தொடங்குவது அவரது நோக்கமாக இருந்தது. விதவைகள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் வாழ்வு பல அமைப்புகளை உருவாக்கியவர்.

English Summary
Today is the birth anniversary of the renaissance Ramabai Playwright William Shakespeare Memorial Day