தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரள, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 23) மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு நாளை (ஜூன் 24) அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதனை ஈடு செய்யும் விதமாக 02.07.2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow local holiday for Ramanathapuram district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->