நாளை பட்டை நாமத்துடன் உண்ணாவிரதம்..மீண்டும் பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அறிவிப்பு!
Tomorrows hunger strike with the name of the bark Public Works Department employees sacked again
பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மாதம் 10500/- ரூபாய் சம்பளம் வழங்கி மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை பட்டை நாமத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறஉள்ளது.
புதுச்சேரி & காரைக்கால்பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள்G.P. தெய்வீகன் , காரைக்கால் C. வினோத் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி அரசின் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வவுச்சர் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அப்போது நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி தேர்தல் துறை நீக்க சொன்னதாக சொல்லி அனைவரையும் பொதுப்பணித்துறை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது அன்று முதல் கடந்த 10 ஆண்டு காலமாக மீண்டும் எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றோம்.
எங்கள் போராட்டத்தின் பயனாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் (:அதாவது ஒரு மாதம் சம்பளம் பெற்று இருந்தாலும்) சம்பளமாக ரூபாய் 10500 /- வழங்கப்பட்டு மீண்டும் வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆணையை வெளியிட்டார்கள்..!
அறிவிப்பு செய்து 2 ஆண்டுகள் ஆகிறது மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு என்பது வெறும் வாய்மொழி உத்தரவு மட்டுமே உள்ளது இதுவரை அரசு உயர் அதிகாரிகள் மீண்டும் பணி வழங்கும் கோப்பிற்கு அனுமதி அளிக்காமல் காலம் கடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்கோர் காட்டி புறக்கணித்து வருகின்றனர்..!
மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சட்ட கூலி ரூபாய் 18000 /- ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6-3-2025 வியாழக்கிழமை மணியளவில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது..போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள்G.P. தெய்வீகன் , காரைக்கால் C. வினோத் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், ஊழியர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் புதுச்சேரி அரசே 10 ஆண்டு கால போராட்டம்! பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டு ஏமாற்ற நினைக்காதே!!சட்ட மன்றத்தில் பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மாதம் 10500/- ரூபாய் சம்பளம் வழங்கி மீண்டும் வேலை வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்து 2 வருடங்கள் ஆகிறது கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டி கால தாமதம் செய்யாமல் உடனே நடடிக்கை எடுக்க வலியுறுத்திபட்டை நாமத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறஉள்ளது.
நாள்:10.03.2025 திங்கட்கிழமை,காலை : 10.00 மணியளவில்,சுதேசி மில், அருகில் நடைபெறும் என்று புதுச்சேரி & காரைக்கால்பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Tomorrows hunger strike with the name of the bark Public Works Department employees sacked again