சுற்றுலா பயணிகளே ரெடியா..அருவியில் குளிக்க அனுமதி!!
Tourist allowed to bathing in the waterfall
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தடையை நீக்கி சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதியில் மணிமுத்தாறு அருவியில் சமீபத்தில் மாஞ்சோலை பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக அருவியில் நீர் மலை போல் கொட்டுகிறது.
கோடை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குளிர்ச்சியான பகுதிகளுக்கும் அருவிகளுக்கும் சென்று கோடை விடுமுறையை கழிப்பது வழக்கம். ஆனால் சமீப நாட்களாக கோடையில் கன மழை பெய்து வருகிறது. சமீபத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் அஸ்வின் என்பவர் உயிர் இருந்தார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலா தளங்கள் காலியாக காட்சியளிக்கிறது.
திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர் த்து வருகிறது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது வனத்துறை.
இந்த நிலையில், மழை குறைந்துள்ளதாலும் அருவியின் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Tourist allowed to bathing in the waterfall