வேலூர் || விபத்தில் உயிரிழந்த நண்பன் - துக்கத்தில் தோழி எடுத்த விபரீத முடிவு.!
twelth student sucide for boy friend died in vellore
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த காந்திநகர் கல்லேரி பகுதியை சேர்ந்தவர் அனிதா. குடியாத்தம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த இவரும், உறவினர் மகன் சிவாவும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிவா கடந்த 19-ந் தேதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். அன்று முதல் மாணவி அனிதா சரியாக சாப்பிடாமல், எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தாமல் சோகத்தில் இருந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்களும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அனிதா கடந்த 24-ந்தேதி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளியில் இருந்து தகவல் வந்துள்ளது. இதைக்கேட்டு பதறிப்போன அனிதாவின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.
உடனே அனிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போது, நேற்று காலை குடியாத்தம்-காட்பாடிரோடு காந்திநகரில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து அனிதாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
பின்னர், போலீசார் அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி அனிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நண்பர் இறந்த துக்கத்தில் தோழி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twelth student sucide for boy friend died in vellore