5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க உதவியாக இருந்த தம்பதிக்கு 20 ஆண்டு சிறை.!
twenty years jail penalty to couples for sexuall harassment case
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க உதவியாக இருந்த தம்பதிக்கு 20 ஆண்டு சிறை.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன்-நதியா தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர், தம்பதியினர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த், தம்பதியினருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஐந்து வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க உதவியாக இருந்த தம்பியினருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twenty years jail penalty to couples for sexuall harassment case