ஒரே நாளில் நடக்க போகும் இரு பேரணிகள்! பதட்டமான சூழ்நிலையில் அனுமதி வழங்குமா தமிழக அரசு!
Two rallies going to happen on the same day
ஆர்எஸ்எஸ்க்கு போட்டியாக வரும் விசிக!
தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பாக அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்த உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி இடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவியின் மீது முடிவு எட்டப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் இந்த மனுவின் மீது முடிவெடுத்து அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. பேரணி நடத்துவதற்கான நெறிமுறைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக முழுவதும் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் "வருகின்ற அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் வீசிக சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். மகாத்மா காந்தி பிறந்த நாளன்று அவரை சுட்டுக் கொன்ற பாசிச சக்திகள் காந்தியடிகளின் பெருமையை ஓரங்கட்ட செய்யும் வகையில் அன்றைய தினம் பேரணி நடத்த உள்ளது" என பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்ந்த இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது விசிகவும் பேரணி நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணமாக பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுமா அல்லது பேரணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
English Summary
Two rallies going to happen on the same day