நீட் விவகாரம் | அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, 'திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்ற வாக்குறுதியை அக்கட்சியின் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சரான மு க ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி ஆகியோர் வாக்குறுதியாக அளித்திருந்தனர்.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து, மூன்றாவது வருடம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை கொடுத்த தேர்தல் வாக்குறுதம்படி நீட் தேர்வு ரத்து செய்யவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அன்மையில் தனத்தையும், மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

மேலும், எதிர்கட்சிகளால் திமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு நிச்சயமாக கையெழுத்திட மாட்டேன் என்று, தமிழக ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

ஆளுநரின் கருத்துக்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவிக்கவே, எதிர்க்கட்சிகள் திமுகவை நோக்கி விமர்சிக்க தொடங்கினர்.

"ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ரத்து செய்திருக்க வேண்டியது தானே. ஆளுநரை கைகாட்டி திசை திருப்ப பார்க்கிறீர்கள்" என்று திமுகவை நோக்கி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தனர்.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்த அமைச்சர் உதயநிதியை கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வு ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கின்றேன். நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம்.

மக்களை ஏமாற்ற மாட்டோம். என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று, அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UDHAYANITHI STALIN SAY ABOUT neet iSSUE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->