நிலம் அளக்க லஞ்சம் கேட்ட விஏஓ - கையும் களவுமாக பிடித்த போலீசார்.!!
vao officer arrested for bribe in viruthunagar aruppukkottai
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வரும் இவர் தனது விவசாய நிலத்தை அளந்து தரக்கோரி வதுவார்பட்டி விஏஓ அலுவலகத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்தார்.
ஆனால், நிலத்தை அளந்து கொடுக்க விஏஓ இப்ராஹிம், கிராம உதவியாளர் சிங்காரம் உள்ளிட்டோருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சின்னத்தம்பி லஞ்சம் கொடுக்க விரும்பாததால் சம்பவம் குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சின்னத்தம்பியிடம் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை கொடுத்து விஏஓவிடம் தருமாறு கொடுத்து அனுப்பினர். பின்னர் போலீசார் வதுவார்பட்டி விஏஓ அலுவலகத்தில் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நிலத்தை அளந்து சான்றிதழ் கொடுக்க சின்னத்தம்பியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ இப்ராஹிம், கிராம உதவியாளர் சிங்காரம் ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களது அலுவலகத்திலும், வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
English Summary
vao officer arrested for bribe in viruthunagar aruppukkottai