ஊதா நிற பாக்கெட் பாலில் தரமும், சுவையும் இல்லை!! குமுறும் வேலூர் மக்கள்!!
Vellore people alleged Aavin purple packet milk not taste and good
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆவின் நிர்வாகம் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆவின் டெலைட் பாலின் ஊதா நிற பாக்கெட்டுகளில் தரம் மற்றும் சுவை குறைவாக இருப்பதாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த பச்சை மற்றும் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக ஆவின் டெலைட் பாக்கெட்டுகள் கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் வட ஆற்காடு மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/ponley milk-cqhed.png)
ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் புதிய தயாரிப்பில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பாலில் 3.5% கொழுப்புச் சத்து மட்டுமே இருப்பதால், மற்ற பால் பாக்கெட்டுகளுடன் ஒப்பிடும் போது நுகர்வோர்ர் பாலில் சுவை மற்றும் தரம் இல்லாததை உணர்கின்றனர்.
வேலூர் கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 600 முகவர்கள் மூலம் சுமார் 80,000 லிட்டர் பால் பாக்கெட் விநியோகிக்கப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/Aavin b.jpg)
பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் தனிப்பட்ட முறையில் பெறப்படும் பாலை விரும்பினாலும், பெரும்பாலான வீடுகள், டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலைத் தேர்வு செய்கின்றன. அதில் 4.5% கொழுப்புச் சத்து மற்றும் 8.5% ஊட்டச்சத்து இருப்பதே அதற்கு காரணம்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வேலூர் ஆவின் பொது மேலாளர் சம்பு மூர்த்தி "வேலூர் மாவட்டத்தில் பச்சை மற்றும் ஆரஞ்சு பால் பாக்கெட் விநியோகம் நிறுத்துவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊதா பால் பாக்கெட் ஏற்கனவே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் விற்கப்படுகிறது. அதன் மீது எந்த புகார் தற்போது வரை வரவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.
பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் நிறுத்தப்பட்டு ஊதா நிற பால் பாக்கெட்டை மக்கள் மீது திணிப்பது தவறு எனவும், இதனால் பொதுமக்கள் தனியார் பால் நிறுவனங்களை நாட நேரிடும் எனவும் சமுக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Vellore people alleged Aavin purple packet milk not taste and good