லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் கலந்துகொள்ளலாம்..!
You can participate in the study of meteorites
சர்வதேச விண்கற்கள் கண்டறியும் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தன்னார்வ அமைப்புகள், போன்றவை,விண்கற்களைக் கண்டறியும் ஆய்வை அரசுத்துறைகளுடன் இணைந்து நடத்துகிறது.
இந்த ஆய்வு மாதம்தோறும் நடத்தப்படும் நிலையில், இதில் ஆசிரியர்கள், அறிவியல் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். அதன்படி சென்ற ஆண்டு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் மூலம் 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் இரு முறை ஈடுபட்டனர்.
இதேபோன்று நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படும் நிலையில், லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வில் கலந்துக்க கொள்ளலாம். இதற்கான தகவலை அறிய கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 என்ற வாட்ஸ்ஆப் எண் மற்றும் galilioscienceclub@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
English Summary
You can participate in the study of meteorites