சாலையை கடக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சாலையை கடக்க முயன்ற இளம்பெண் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், புதுப்பட்டியில்  தனியார் காட்டன் மில்லில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த நிமிகுமாரி (வயது 18)  என்ற பெண் குடும்பத்துடன் தங்கியிருந்து பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில், சம்வதன்று பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது மில் வாசல் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது சரக்குவாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Girl Dead In Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->