வசூலுக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் - பெற்றோர் அதிரடி.!
young man arrested for harassment in chennai
வசூலுக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் - பெற்றோர் அதிரடி.!
சென்னையில் உள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் அந்தோணிராஜ். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் இவர் சென்னை புறநகரில் கூலித் தொழிலாளி ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.
அவரிடம் தினமும் காலையில் சென்று அந்தோணிராஜ் பணம் வசூலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தோணிராஜ் பணம் வசூலிக்க வழக்கம்போல் சென்ற போது வீட்டில் பெற்றோர் இல்லாமல், 12 வயது சிறுமி மட்டும் தனியே இருந்துள்ளார்.
இதையறிந்த சுரேஷ் அந்தோணிராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவலை சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அளித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மறுநாள் வீட்டில் மறைந்து கொண்டனர்.
அப்போது வழக்கம் போல் வசூலுக்கு வந்த சுரேஷ் அந்தோணிராஜ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார்.
அவரை அங்கு மறைந்திருந்த சிறுமியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உடனே போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். வசூலுக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man arrested for harassment in chennai