ஓடும் ரயிலில் ஆண் செய்த மோசமான செயல்.. போலீசில் ஒப்படைத்த பெண் யூடியூபர்.!
Young man masterbate in ladies compartment train
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் யூடியூப் சேனலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு கடற்கரை-தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இரவு 9.40 மணி அளவில் ரயில் மீனம்பாக்கம் ரயில்நிலையத்தை வந்தடைந்ததும் ஆண் ஒருவர் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறியுள்ளார். இதனால் அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதன் பிறகு ரயில் சிறிது தூரம் புறப்பட்டதும் அந்த ஆண் நபர் பெண்கள் முன்பே சுய இன்பம் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் யூடியூபர் அந்த ஆண் நபர் செய்யும் கேவலமான செயலை வீடியோ எடுத்துள்ளார்.
அதன்பிறகு அந்தப் பெண் திட்டியதும் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார். இந்த வீடியோவை அந்த பெண் யூடிபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தாம்பரம் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.
மேலும், போலீஸ் விசாரணையில் அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் யூடியூபர் வரவழைக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டார். அதன் பிறகு அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் தடுக்க பெண்கள் கம்பார்ட்மெண்டில் பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Young man masterbate in ladies compartment train