இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை! போலீசார் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை, மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது 21). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 

இவர் செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

இது குறித்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். 

கோகுல் சாகசம் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கோகுலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பாக போலீசார், இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for wheeling motorcycle


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->