வீடியோவை நீக்கிய யூடியூபர் இர்ஃபான்! சர்ச்சைகளுக்கு புது விளக்கம்!
youtuber irfan video issue
யூடியூபில் பிரபலமாக உள்ள புட் ரிவியூவர் இர்பான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். 4.28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ள இவரின் யூடியூப் சேனலில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரிடமும் வீடியோ எடுத்து பதிவேற்றி உள்ளார்.
அரசியல் ரீதியாக இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஹசீஃபாவை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது துபாய் சென்று அவரின் மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், யூடியூபர் இர்பானுக்கு நாேட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவெடுத்துள்ளதாகவும், மூன்று பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், அந்த காணொளியை நீக்க கோரியும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு இர்பான் அளித்துள்ள விளக்கத்தில், இந்த காணொளி இவ்வளவு பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்று எனக்கு தெரியாது. மேலும் சர்ச்சைகளுக்கு வழி வகுக்காமல் இந்த காணொளியை youtube மற்றும் அனைத்து சமூக வலைத்தள பக்கத்தில் இருந்தும் நீக்கி விட்டேன்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் அது குறித்து பதில் அளிப்பேன்" என்று youtuber இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
youtuber irfan video issue