கூகுள் பேவில் ஆட்டையை போட புது யுக்தி.. மக்களே உஷார்.! போலீஸ் எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் ஆட்கள் மூலமாக மோசடிகள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

என்னதான் காவல்துறையும், சைபர் கிரைம் குழுவும் பொதுமக்களிடம் ஆன்லைன் மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி பலமுறை கூறி வந்தாலும் அவர்கள் தகுந்த நேரத்தில் அதை கோட்டை விட்டு விடுகின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒன் டைம் பாஸ்வேர்ட் கேட்டு கால் செய்து வங்கி கணக்கிலிருந்து பணத்தை சில கும்பல்கள் அபேஸ் செய்து வந்தது.

இந்த விஷயம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் கூட பலரும் தற்போது வயதானவர்களை குறி வைத்து இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் ஆன்லைன் மோசடிகளை நடத்த பல்வேறு புதிய புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இது குறித்து தற்போது காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "கூகுள் பே மூலமாக புதிய மோசடி நடக்கிறது. தெரியாமல் உங்கள் செல்போன் எண்ணுக்கு பணத்தை அனுப்பி விட்டதாக கூறி திரும்ப அனுப்ப சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். அப்படி தெரியாத நபர்கள் பணத்தை அனுப்பிவிட்டு நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பும் போது உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள்." என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police make awareness about Gpay Crime 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->