5ஜி அலைக்கற்றைக்கு இன்று 5வது சுற்று ஏலம்.! முன்னணி நிறுவனங்கள் மும்முரம்.!!
Today 5G Spectrum Auction
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 72 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 4.3 லட்சம் கோடி கிடைக்கும். இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது.
அதானி நிறுவனம் தனி பயன்பாடுக்காக இந்த ஏலத்தில் கலந்துகொண்டுள்ளது. மற்ற மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் இவ்வாண்டு இறுதி அல்லது 2023 ஆண்டுக்குள் 5ஜி சேவையை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்துக்கான வைப்பு நிதியை ஜியோ ரூ. 14 ஆயிரம் கோடி, ஏர்டெல் ரூ, 5,500 கோடி, வோடபோன் - ஐடியா ரூ. 2200 கோடி, அதானி குழுமம் ரூ. 100 கோடி அளவில் செலுத்தியுள்ளனர்.
குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. 20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலை குடைப்பதற்காக ஏல தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நிறுவனங்கள் அலைக்கற்றைக்கான தொகையை மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போதும் அவாண்டுக்கான தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கு 5வது சுற்று ஏலம் இன்று நடைபெறுகிறது. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
English Summary
Today 5G Spectrum Auction