மக்களே ரெடியா! வெளுத்து வாங்கபோகும் மழை! இனி குளு குளுதான்!
According to the Chennai Meteorological Center there is a possibility of moderate rain in Tamil Nadu till July 27
தமிழகத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு வாரங்களாக கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மேற்கு திசையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மட்டும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
வரும் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடம் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவுக்கு மேகம் மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வருகின்ற 25ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதியில் மற்றும் அதனைஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மற்றும் குமரி பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் பகுதிக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
According to the Chennai Meteorological Center there is a possibility of moderate rain in Tamil Nadu till July 27