சென்னையில் 200-300 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்பொழுது இலங்கையின் கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலு பெற்று தமிழக மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கையின் வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெயர் கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இன்று காலை முதல் நகரின் பெரும்பான்மையான பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் 13-ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் "சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 200 முதல் 300 மில்லி மீட்டர் மழை பதிவாக வாய்ப்புள்ளது. 

ஒரு சில இடங்களில் 500 மில்லி மீட்டர் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். டெல்டா மாவட்டத்திலிருந்து சென்னை வரை அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்யும்" என எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of 200 to 300 mm of rain in Chennai Tamilnadu weatherman alert


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->