"நெகமம்" பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு..!! நெசவாளர்கள் மகிழ்ச்சி..!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறப்பாக விளங்கும் பொருட்கள் மற்றும் அடையாளங்களை கண்டறிந்து அவற்றை கவுரவிக்கவும் அங்கீகரிக்கவும் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தை உலகத்துக்கிற்கு பிரபலப்படுத்தவும் பாரம்பரிய அடையாளத்தையும் பறைசாற்றவும் முடிகிறது.

கடந்த 1999ம் ஆண்டு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு கடந்த 2003ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தின் மூலம் பல்வேறு ஊர்களில் உள்ள சிறப்பு வாய்ந்த விஷயங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், அறிவுசார் சொத்து உரிமை துறை ஆகியவை இணைந்து புவிசார் குறியீட்டை வழங்குகிறது. இதனடிப்படையில் நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் அங்கீகாரம் கோரி புவிசார் குறியீடு பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நெகமம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தனித்திறமை வாய்ந்த நெசவாளர்களால் கைத்தறியில் பருத்தி சேலைகளை நெய்து வருகின்றனர். இந்த சேலைகள் தரம், வடிவமைப்பு, பல வண்ணங்கள் ஆகியவற்றால் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக "நெகமம் பருத்தி சேலைகள்" என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

நெகமம் பருத்தி சேலைக்கான புவிசார் குறியீடிற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 30ம் தேதியுடன் நான்கு மாதம் முடிவடைந்துவிட்டது. புவிசார் குறியீடு உறுதி செய்யப்படும் என்பதால் நெகமம் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துவிட்டதாகவே அர்த்தம். இதன் காரணமாக கூடிய விரைவில் அதற்கான சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நெகமம் பருத்தி சேலை நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Geocode for Negamam Cotton Saree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->