மக்களே உஷார்!...தமிழத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை!...வானிலை எச்சரிக்கை!
People beware heavy rain is going to lash in tamil nadu today weather alert
வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இனி வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி வரை லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, இன்று திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர்தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் வரும் 9-ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
People beware heavy rain is going to lash in tamil nadu today weather alert