14 ஆம் தேதி வரை வெளுத்து வாங்க போகும் மழை - வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதன் படி கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதேபோல், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain till coming 14th in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->