ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை!
Red alert for six districts Heavy rain next four days
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்பொழுது இலங்கையின் கடற் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலு பெற்று தமிழக மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி உட்பட 16 மாவட்டங்களிலில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோன்று நாளை (11/11/2022) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போன்று சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உட்பட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களை கன மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகக் கூட்டமாக காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலின் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முழுவதும் பரவலாக அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளையிடம் மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Red alert for six districts Heavy rain next four days