பந்தலூரில் வரலாறு காணாத வித்தியாசமான மழை - வெதெர்மேன் கூறிய தகவல்..!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் அவர், "வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழையின் போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும். அந்த வகையில் தான் தற்போது நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

பந்தலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் மிக அதிகப்படியான கனமழை தற்போது பெய்து வருகிறது. மோயார் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் எப்படி சென்னையில் மேகங்கள் இடை விடாமல் நகர்ந்து வந்து மழை பொழிந்ததோ , அது போலொரு சம்பவம் தான் தற்போது நீலகிரி மாவட்டம் பந்தலூரில் நடக்கிறது.

நேற்று மாலை 4 மணியளவில் 80 மி. மீ. மழை பதிவாகி உள்ளது. இது இன்னும் அதிகரித்து 200மி. மீ. முதல் 300 மி. மீ வரை மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இங்கு பெய்து வரும் மழை இதுவரை வரலாறு எங்கும் காணாத ஒரு வித்தியாசமான மழை. 

கேரளாவில் கூட இந்த அளவு மழை இல்லை. ஆனால் பந்தலூரில் தொடர்ந்து மேகக் கூட்டங்கள் இடை விடாது நகர்ந்து கொண்டே இருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பந்தலூர் பகுதியில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Weatherman Pradeep John Tweet About Pandalur Heavy Rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->