மத்திய அமெரிக்க நாடுகளை சூறையாடிய ஜூலியா புயலால் 28 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பசுபிக் பெருங்கடலில் உருவான ஜூலியா புயல், மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமலா மற்றும் எல் சல்வடார் நாடுகளை தாக்கியதில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்தி வாய்ந்த ஜூலியா புயல் முதலில் கவுதமாலாவை தாக்கியது. இங்கு மணிக்கு 135 கீ.மி வேகத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கவுதமலா நாட்டின் அதிபர் அலெஜான்ட்ரோ கியாமட்டேய் தேசிய பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.

கவுதமலாவையடுத்து எல் சல்வடார் நாட்டை புயல் தாக்கியதில், குவாட்டாஜாகுவா மற்றும் கோமசாகுவா நகர பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் ஜூலியா புயலினால் கவுதமலா நாட்டில் 18 பேர் மற்றும் எல் சல்வடாரில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 died in Julia hurricane attacks central american countries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->