ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டிய வினோதம்!!! 13 பேர் அர்ஜென்டினா வெள்ளப்பெருக்கில் பலி!!! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா நாட்டில் ஒரு வருடத்திற்குத் தேவையான மழைச் சில மணி நேரங்களிலேயே பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட கடுமையான புயல் வெள்ளத்தில் 13 பேர் அகல மரணமடைந்தனர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமைக் காலை தொடங்கிய மழை,8 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் அளவு பெய்தது. இது குறித்து மாகாண பாதுகாப்பு அமைச்சர் ஜேவியர் அலோன்சோ, இது பஹியா பிளாங்காவில் ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை விட மிக அதிகம் என்று தெரிவித்தார்.

கடுமையான புயல்:

புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த மழைக் காரணமாக மருத்துவமனை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் சுற்றுப்புறங்கள் தீவுகளாக மாறி காட்சியளித்தது. நகரின் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை 10 பேராக இருந்த இறப்பு எண்ணிக்கை நேற்று (சனிக்கிழமை) 13 ஆக உயர்ந்து என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 3,50,000 மக்கள்தொகைக் கொண்ட இந்த நகரம், தலைநகரான பியூனஸ் அயர்ஸிலிருந்து தென்மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இதுகுறித்து வெள்ளப் பாதிப்பை நேற்று பார்வையிட வந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது, அப்பகுதி மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.சிலர் அவரை வெள்ள நீரில் இழுக்க முயன்றனர். ஆனால் அவர் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்ற பட்டார்

.மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.மக்களைக் காப்பாற்ற அப்பகுதி போலீசார்த் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பலத்த புயல் வெள்ளத்துக்கான காரணத்தை அறிய அந்நாட்டு அரசு முயற்சியில் இறங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A years worth of rain fell in one day killing 13 people in Argentina floods


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->