நாடாளுமன்றத்தின் முக்கிய நபரால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - அதிரவைத்த பெண் எம்.பி.,யின் குற்றச்சாட்டு!
Australia MP Abuse Complaint
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .லிடியா தோர்ப், சக எம்.பி.யான டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டை நாடாளுமன்ற அவையிலேயே முன்வைத்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற அவையில் கண்ணீர் மல்க பேசிய லிடியா, “ நான் இந்த நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரான டேவிட் வானால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்.
அவர் என்னை படிக்கட்டில் தள்ளி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது போன்ற நிகழ்வு இங்கு பலருக்கும் நடந்துள்ளது. ஆனால் அவர்களெல்லாம் தங்கள் பணிக்காக இதை பற்றி வெளியே வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் செய்தது மிகவும் அவமானமான செயல், அவரைப் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர் ஏற்கனவே டேவின் வான் மீது பெண் எம்.பி.,க்கள் சிலர் பாலியல் குற்றச்சட்டை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தொழிலாளர் கட்சியை சேர்ந்த டேவிட் வான் மறுத்துள்ளார்.
லிடியா கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் இதனால் தான் மனமுடைந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் டேவிட் வான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்ததடையடுத்து தொழிலாளர் கட்சி அவரை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதலே ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக 5 வழக்குகள் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Australia MP Abuse Complaint