2023ல் அரங்கேற போகும் பயங்கர சம்பவங்கள்..!! பாபா வாங்கா கணிப்பு இதோ..!! - Seithipunal
Seithipunal


பாபா வாங்காவின் கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போதும் அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் குறித்த தகவல் வெளியாகும். பாபா வாங்காவின் கணிப்புகள்படி பல சம்பவங்கள் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு. அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டையானா இறப்பு, பராக் ஒபாமா அதிபரானது, பிரெக்சிட் வழக்கு போன்ற சம்பவங்கள் பாபா வாங்காவின் கணிப்புப்படியே நடந்திருக்கிறது.

பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வாங்கா என்ற பெண் தனது 12 வயதில் பார்வையை இழந்தார். அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததாகவும், இவர் கணித்தால் 85 சதவிகிதம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது. இவர் 1996ம் ஆண்டு இறந்திருந்தாலும் 5079ம் ஆண்டு வரைக்குமான எதிர்காலத்தை பாபா வாங்கா கணித்துள்ளார்.

அவரின் கணிப்பு படி வரும் 2023ம் ஆண்டில் "சூரிய சுனாமி அல்லது சூரிய புயல் ஏற்படலாம். சூரிய சுனாமி ஏற்படும்பட்சத்தில் பூமியின் மீதான காந்த அலைகள் அழிக்கப்படும். வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன்களால் பூமியில் இருக்கும் உயிரினங்கள் லட்சக்கணக்கில் அழிக்கப்படலாம்.

பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் வரும். பூமியின் சுற்றுப்பாதையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகள் பரிசோதனைக் கூடங்களில் உருவாக்கப்படுவர். பிறக்கப் போகும் போதே நிறம் மற்றும் குணநலன்களை பெற்றோர் தேர்வு செய்து குழந்தை பெறுவார்கள். மின் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பினால், விஷ வாயு ஆகாயத்தில் மேகமாக தோன்றி, ஆசியாவின் பகுதிகளை பனிப்போர்வை போல மறைக்கும். இதன் காரணமாக மற்ற நாடுகளில் நோய் பரவலாம் என கண்டித்துள்ளார். புத்தாண்டு பிறக்கும் முன்பே உலக மக்களுக்கு பீதியை கிளப்பும் வகையில் பாபா வாங்காவின் கணிப்பு அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baba Vanga Prediction for 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->