இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு செல்லலாமா? - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!
Can Indians visit Israel and Iran here is the important information released by the central government
கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஈரான் ஏவுகணைகளை வீசியது. 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே சமயத்தில் வீசி ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது நேற்றிரவு ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து உள்ளார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இஸ்ரேலில் உள்ள இந்திய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
English Summary
Can Indians visit Israel and Iran here is the important information released by the central government