அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எந்த நாட்டையும் நாங்கள் எதிர்ப்போம்! - சீனா
China oppose any country that makes trade deal US
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள், இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதிப்பை அறிவித்தார். இதில், சீனாவும் அமெரிக்காவுக்கு பதிலடியாக வரிகளை விதித்தது.

இதனால் அமெரிக்கா, மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245% அதிகரித்து அறிவித்தது. அதற்கும் மறு பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.
இந்த சூழலில், வரிச் சுமையை குறைப்பதாக தெரிவித்து சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சீனா, 'சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் (வர்த்தக) ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
சீனா:
மேலும்,சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டிருப்பதாவது, "சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளது.
இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.
English Summary
China oppose any country that makes trade deal US