சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு - சீன சைபர்ஸ்பேஸ் அமைச்சகம்! - Seithipunal
Seithipunal


சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் இணையம் பயன்படுத்தும் நேரத்தை சீன அரசு நிர்ணயித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

சீனாவின் சைபர்ஸ்பேஸ் என்ற அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விளையாட்டுகள் வெளியிட்டுள்ளது. அதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணைய சேவைகளை பெற முடியாது. 

ஒரு நாளைக்கு, 16 முதல் 18 வயது உட்பட்டவர்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடியும். இதே போல் 8 முதல் 15 வயது உட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும். 

8 வயதுக்கு உட்பட்ட குழந்தைங்களுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணையதளம் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்துக்கு ஏற்றவையாக கருதப்படும் செயலிகள் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த செயலிகள் குறித்த தகவல்கள் சீன சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் வெளியிடவில்லை. இணையதளத்துக்கு எல்லாம் தலைமுறையினர் அடிமையாகாமல் அதிலிருந்து காப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்வதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 

குழந்தைகளுக்கான ஆன்லைன் கட்டுப்பாடுகளை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே சீன அரசு கடுமையாக்கி வருகிறது. இளம் தலைமுறையினர் இந்த கட்டுப்பாட்டுக்கு பிறகு இணையதளத்துக்கு அடிமையாவது குறைந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. 

இந்த புதிய நேர கட்டுப்பாடுகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த விவரம் எதுவும் சீன அரசு குறிப்பிடவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China under 18 age Childrens new restrictions


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->