ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் போனஸ் கொடுத்து அசத்திய சீன நிறுவனம் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


உலகத்தில் கடந்த இரண்டு வருங்களாக ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், முகநூல், டுவிட்டர், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். 

இந்த இக்கட்டான நிலையில், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் நிறுவனம் 'ஹெனன் மைன்'. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. 

கடந்து இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா தொற்றால் சீனாவின் பொருளாதாரம் ஒருபக்கம் சரிந்து வரும் சமயத்தில், ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்து மொத்தம் 9.16 பில்லியன் யுவான் ஆக இருந்தது. 

இதனால், அளவற்ற மகிழ்ச்சியில் உறைந்து போன அந்த நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தது. அதற்காக நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தது. 

அந்த நிகழ்ச்சியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்ட 61 மில்லியன் மதிப்புள்ள யுவானிலிருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய மூன்று விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் அதாவது, ஆறு கோடி ரூபாய் போனசாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா 1 மில்லியன் யுவான் அதாவது ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டியும் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 லட்சம் வரை பரிசும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், ஊழியர்கள் பணத்தை அள்ளிச் செல்வதும், மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள பணக் கட்டும் வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chinese company give crores bonus to employees


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->