காதுக்குள் இருந்த ஏதோ ஒன்று.. பரிசோதித்துப் பார்த்த போது அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரைச் சேர்ந்த வெட்டிங் என்பவர் தனக்கு காது வலி இருப்பதாக உணர்ந்துள்ளார். அத்துடன் காதுக்குள் வித்தியாசமான உணர்வு இருந்ததால் பரிசோதிக்க அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அப்போது அவரை பரிசோதித்த காது நிபுணர் அவருடைய காதில் பூச்சி இருப்பதை கண்டுபிடித்தார். அத்துடன் ஒரு பிரத்தியேக கருவியைக் கொண்டு அவர் காதில் இருந்த பூச்சியை வெளியே கொண்டு வந்தார். 

அதன் பிறகுதான் தெரிந்தது உள்ளே இருந்தது கரப்பான் பூச்சி என்று. இவருடைய காதிற்குள் எப்படி பெரிய சைஸ் கரப்பான் பூச்சி சென்றது என்பது ஜென் வெட்டிங்குக்கு தெரியவில்லை.

அவர் தூங்கும் பொழுது கரப்பான் பூச்சி காதுக்குள் சென்று இருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இது போல எறும்பு போன்றவை நுழைவது வழக்கம். ஆனால் கரப்பான் பூச்சி காதுக்குள் செல்வது கூட தெரியாமல் ஒருவர் தூங்கி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cockroach entering the ear in New Zealand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->