மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளுக்கு செல்ல தடை! இலங்கை நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளுக்கு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனால் இலங்கையில் வன்முறை தீவிரம் அடைந்ததை அடுத்து தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரை விட்டு வெளியேறி திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் அவர்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.

மேலும் அங்கிருந்து அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லலாம் என்று தகவல் வெளியான நிலையில், சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 17 பேருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court prohibits rajapaksa to go abroad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->