விவேக் ராமசாமியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமியும் இடம் பெற்றுள்ளார். இவருடன் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஷ் கிரிஸ்டி, முன்னாள் துணையாதிபர் மைக் பென்ஸ், சவுத் கரோலினா முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டால் தான் துணை அதிபராக போட்டியிட தயாராக உள்ளதாக விவேக் ராமசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் விவேக் ராமசாமி குறித்து பேசிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் "விவேக் ராமசாமி ஒரு மிகச் சிறந்த அறிவாளி, சிறந்த ஆற்றல் மிக்க நபராக உள்ளார். அவர் மிக சிறந்த துணை அதிபர் வேட்பாளராக இருப்பார்" என விவேக் ராமசாமியை முன்னாள் அதிபர் ட்ரம்ப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump praised Vivek Ramasamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->