நடுக்கடலில் இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


 

இந்தியாவை சேர்ந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூர் நோக்கி சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது நாடு கடலில் ட்ரோன் மூலம் நடத்தபட்ட தாக்குதலில் தீப்பற்றி எரிந்ததாகவும், பின்னர் அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தாக்குதலால் கப்பலின் செயல்பாடு பாதித்துள்ளது. இதன் காரணமாக இந்திய கப்பல் படையை சேர்ந்த விக்ரம் கப்பல் சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்பு பணிக்காக விரைந்துள்ளது. தாக்குலத்தலுக்கு ஆளான கப்பலில் 20 இந்தியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிய வந்துள்ளது. ICGS விக்ரம் கப்பல் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களுக்கும் உதவி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drone attack on Indian crude oil ship in middle sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->